பொது செய்தி

தமிழ்நாடு

யோகா மருத்துவ படிப்பு வரும் 7ல் கவுன்சிலிங்

Added : ஜன 02, 2021
Share
Advertisement
சென்னை:யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்பிற்கான கவுன்சிலிங் வரும், 7ம் தேதி துவங்குகிறது.இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ், அரும்பாக்கம் அரசு கல்லுாரியில், 60 இடங்கள்; 17 தனியார் கல்லுாரிகளில், 1,053 அரசு ஒதுக்கீட்டு இடங்கள்உள்ளன. அதேபோல, நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 557 இடங்கள் உள்ளன.இந்த இடங்களுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற

சென்னை:யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்பிற்கான கவுன்சிலிங் வரும், 7ம் தேதி துவங்குகிறது.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ், அரும்பாக்கம் அரசு கல்லுாரியில், 60 இடங்கள்; 17 தனியார் கல்லுாரிகளில், 1,053 அரசு ஒதுக்கீட்டு இடங்கள்உள்ளன. அதேபோல, நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 557 இடங்கள் உள்ளன.இந்த இடங்களுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இந்த படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களில், 2,002 பேர் தரவரிசை பட்டியலில் இடம் பெற்று உள்ளனர். இதற்கான மாணவர் சேர்க்கை, வரும், 7 முதல், 12ம் தேதி வரை, சென்னை அரும்பாக்கம், சித்தா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. முதல் நாள் காலை, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், நண்பகல் முதல், பொது பிரிவு மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நடைபெறும். மேலும் விபரங்களை, https://tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X