அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிறப்பு சட்டசபை கூட்டம் முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்

Added : ஜன 02, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை:'வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்' முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.கடிதம் விபரம்:பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து, நேற்று கேரள சட்டசபையிலும், மூன்று வேளாண் சட்டங்ளை ரத்து செய்ய வேண்டும் என, வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.எனவே, மத்திய அரசின்,
 சிறப்பு சட்டசபை கூட்டம் முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை:'வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்' முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதம் விபரம்:பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து, நேற்று கேரள சட்டசபையிலும், மூன்று வேளாண் சட்டங்ளை ரத்து செய்ய வேண்டும் என, வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.எனவே, மத்திய அரசின், மூன்று வேளாண் சட்டங்களையும், திரும்ப பெற வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதற்காக, சட்டசபையை உடனே கூட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொண்டர்களுக்கு, ஸ்டாலின் எழுதிய கடிதம்:தி.மு.க.,வின் கிராம சபை கூட்டங்கள், இப்போது மக்கள் கிராம சபை என, மகத்தான மறுவடிவத்தை பெற்றிருக்கிறது. நாம் நடத்தி, மக்கள் பங்கேற்பது என்ற நிலை மாறி, மக்கள் அழைக்க, நாம் பங்கேற்கும் நிலையை எட்டியுள்ளது. கிராம சபை கூட்டங்களை தடுக்க நினைத்து, போலீசாரை ஏவி, கட்சியினரை கைது செய்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின், தொண்டாமுத்துாரில் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டத்தில், நான் பங்கேற்கிறேன்.

அதை தொடர்ந்து, அமைச்சர் செங்கோட்டையனின், கோபி செட்டிபாளையம்; அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை; அமைச்சர் காமராஜின் நன்னிலம் தொகுதியில் பங்கேற்கிறேன். இந்த புத்தாண்டில் புது விடியல் நிச்சயம்; 200 தொகுதிகள் வெற்றி என்ற, இலக்கை அடைவோம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
02-ஜன-202108:26:25 IST Report Abuse
RajanRajan கரை வேட்டியை உருவி தலையிலே சுத்திட்டு வெளிநடப்பு செய்து நாளாச்சுதேன்னு சுடலை சபைய கூட்ட சொல்லுறார். சபையெல்லாம் இப்போ குரானா இருக்கிறதுனாலே கூட முடியாது. வேண்டும்ன்னு உங்க ஜெபக்கூட்ட சபையை கூட்டிக்கோங்க என்ன தீர்மானம் வோணும்னாலும் போட்டுக்கோங்க. டுமிலன்ஸ் கூட்டம்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
02-ஜன-202106:14:48 IST Report Abuse
Girija பத்து பிள்ளை பெற்றவளுக்கு தலைச்சன் பிள்ளைக்காரி தைரியம் சொன்னாளாம்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02-ஜன-202104:45:37 IST Report Abuse
J.V. Iyer நிழல் முதல்வர், நிரந்தர நிழல் முதல்வரே சுடலையார் தமிழகத்தின் நிரந்தர நிழல் முதல்வரே ஆவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X