சென்னை:'வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்' முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதம் விபரம்:பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து, நேற்று கேரள சட்டசபையிலும், மூன்று வேளாண் சட்டங்ளை ரத்து செய்ய வேண்டும் என, வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.எனவே, மத்திய அரசின், மூன்று வேளாண் சட்டங்களையும், திரும்ப பெற வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதற்காக, சட்டசபையை உடனே கூட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
தொண்டர்களுக்கு, ஸ்டாலின் எழுதிய கடிதம்:தி.மு.க.,வின் கிராம சபை கூட்டங்கள், இப்போது மக்கள் கிராம சபை என, மகத்தான மறுவடிவத்தை பெற்றிருக்கிறது. நாம் நடத்தி, மக்கள் பங்கேற்பது என்ற நிலை மாறி, மக்கள் அழைக்க, நாம் பங்கேற்கும் நிலையை எட்டியுள்ளது. கிராம சபை கூட்டங்களை தடுக்க நினைத்து, போலீசாரை ஏவி, கட்சியினரை கைது செய்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின், தொண்டாமுத்துாரில் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டத்தில், நான் பங்கேற்கிறேன்.
அதை தொடர்ந்து, அமைச்சர் செங்கோட்டையனின், கோபி செட்டிபாளையம்; அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை; அமைச்சர் காமராஜின் நன்னிலம் தொகுதியில் பங்கேற்கிறேன். இந்த புத்தாண்டில் புது விடியல் நிச்சயம்; 200 தொகுதிகள் வெற்றி என்ற, இலக்கை அடைவோம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE