கிரண்பேடியை கண்டித்து காங்., தொடர் போராட்டம்

Added : ஜன 02, 2021
Share
Advertisement
புதுச்சேரி:புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை கண்டித்து, 8ம் தேதி முதல், தொடர் போராட்டம் நடத்த காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரியில், காங்., கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம், சில தினங்களுக்கு முன் காங்., தலைமை அலுவலகத்தில் நடந்தது. கம்யூ., - வி.சி., - ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். கட்சிகள் முடிவுமக்கள் நலத்

புதுச்சேரி:புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை கண்டித்து, 8ம் தேதி முதல், தொடர் போராட்டம் நடத்த காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில், காங்., கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம், சில தினங்களுக்கு முன் காங்., தலைமை அலுவலகத்தில் நடந்தது. கம்யூ., - வி.சி., - ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். கட்சிகள் முடிவுமக்கள் நலத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து, போராட்டம் நடத்த, கூட்டணி கட்சிகளின் ஆதரவை, காங்கிரஸ் கோரியது.

இந்நிலையில், நேற்று முன்தினம், முதல்வர் நாராயணசாமி தலைமையில், காங்., அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. தமிழகத்தில் பொங்கல் பரிசாக, 2,500 ரூபாய் அறிவித்ததை போல புதுச்சேரியிலும் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கவர்னர் கிரண்பேடியை கண்டித்தும் வரும், 8ம் தேதி முதல் கவர்னர் மாளிகை முன் தொடர் போராட்டம் நடத்த, முடிவு செய்யப்பட்டது.


சந்திக்க தயார்



முதல்வர் நாராயணசாமி அளித்த பேட்டி: நாட்டில் பெரும்பான்மையாக உள்ளவர்களின் கருத்துக்கு மரியாதை அளிக்க வேண்டும். அதை, மத்தியில் உள்ள மோடியும், புதுச்சேரியில் உள்ள கிரண்பேடியும் கடைப்பிடிப்பதில்லை.எங்களுடைய கையை கட்டிவிட்டு, வேலை செய்ய சொன்னால், எப்படி வேலை செய்ய முடியும். எதிர்க்கட்சிகளும் கிரண்பேடியோடு சேர்ந்து நாடகம் ஆடுகின்றன.

கவர்னருக்கு ஆதரவாக செயல்பட்டு, புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு எதிர்க்கட்சிகள் தடையாக உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.கவர்னரை கண்டித்து, 8ம் தேதி போராட்டம் அறிவிக்கப் பட்டது குறித்து கேட்டதற்கு, ''நான் காங்., கட்சியின் தொண்டன். என்னை அழைத்தால், போராட்டத்திற்கு செல்வேன். எல்லா விளைவுகளையும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X