சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.1 கோடி மோசடி 'பலே' வாலிபர் கைது

Added : ஜன 02, 2021
Share
Advertisement
கடலுார்:அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக, 1 கோடி ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் மணிமாறன், 26; வேப்பூர் புது காலனியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர், 33; நண்பர்கள்.'விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை பணிமனையில், இளநிலை உதவியாளராக உள்ளேன். அங்கு, இளநிலை உதவியாளர் காலிப்

கடலுார்:அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக, 1 கோடி ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் மணிமாறன், 26; வேப்பூர் புது காலனியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர், 33; நண்பர்கள்.'விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை பணிமனையில், இளநிலை உதவியாளராக உள்ளேன். அங்கு, இளநிலை உதவியாளர் காலிப் பணியிடங்கள் உள்ளன. பணம் கொடுத்தால் வேலை வாங்கித் தருகிறேன்' என, பாலச்சந்தர் கூறியுள்ளார்.

இதை நம்பிய மணிமாறன், பாலசந்தரிடம் பல தவணைகளாக, 8 லட்சம் ரூபாய் கொடுத்து உள்ளார். இவரது சித்தி சிவரஞ்சனி, 8 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.இதையடுத்து, டிப்போவுக்கு மணிமாறனை வரவழைத்து, பணி நியமன ஆணை கொடுத்து, வருகை பதிவேடு ஒன்றைக் காட்டி, பாலச்சந்தர் கையெழுத்து வாங்கியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக, வேலைக்கு வரவேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

மணிமாறனுக்கு ஒரு மாத சம்பளமாக, 18 ஆயிரத்து, 500 ரூபாயை, தன் வங்கிக் கணக்கில் இருந்து பாலச்சந்தர் செலுத்தியுள்ளார். சந்தேகமடைந்த மணிமாறன், பணி நியமன ஆணையை, டிப்போவில் காட்டி விசாரித்தார். அது போலி என தெரியவந்தது.மணிமாறன் புகாரின்படி, மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் துர்கா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார்.

இதில், 14 பேரிடம், 1 கோடியே, 3 லட்சத்து, 15 ஆயிரம் ரூபாய் பெற்று, வேலை வாங்கி தருவதாக பாலச்சந்தர் மோசடி செய்துள்ளது தெரியவந்தது.பாலச்சந்தரை நேற்று கைது செய்து, அவரது வீட்டில், போலி ஆவணம் தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், மானிட்டர், பிரின்டர், போலி சீல்கள், மொபைல் போன், ஏ.டி.எம்., கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X