பொது செய்தி

தமிழ்நாடு

தேவை பண்டிகை கால ரயில் சேவை! மதுரை கோட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை

Added : ஜன 02, 2021
Share
Advertisement
உடுமலை;பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்துக்காக, உடுமலை வழியாக, பயணியர் ரயில்களை கூடுதலாக இயக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல்-கோவை அகல ரயில்பாதை பணிகள் நிறைவு பெற்று, கடந்த 2015ல், இருந்து ரயில் போக்குவரத்து உள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப்பிறகு, தற்போது, சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே, உடுமலை வழியாக
 தேவை பண்டிகை கால ரயில் சேவை! மதுரை கோட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை

உடுமலை;பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்துக்காக, உடுமலை வழியாக, பயணியர் ரயில்களை கூடுதலாக இயக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல்-கோவை அகல ரயில்பாதை பணிகள் நிறைவு பெற்று, கடந்த 2015ல், இருந்து ரயில் போக்குவரத்து உள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப்பிறகு, தற்போது, சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே, உடுமலை வழியாக இயக்கப்படுகின்றன. இந்நிலையில், பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்துக்காக, கூடுதலாக பயணியர் ரயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பயணிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்தாண்டு, ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு, அதிக வரவேற்பு கிடைத்தது. நடப்பாண்டும், இந்த ரயிலை இயக்க வேண்டும்.பொங்கலை தொடர்ந்து, தைப்பூசம், பொள்ளாச்சி, உடுமலை பகுதியில், சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி, பழநிக்கு பாதயாத்திரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். இவ்வாறு, செல்பவர்கள், சொந்த ஊருக்கு பஸ்களில் திரும்புகின்றனர்.அப்போது, உடுமலை, பொள்ளாச்சி மற்றும் கேரளா பாலக்காடு உட்பட பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் போதிய பஸ் வசதி இல்லாமல், பாதிக்கப்படுகின்றனர். இந்தாண்டு, ஜன., 28ல், தைப்பூசத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்துக்காக கோவை-பழநி சிறப்பு ரயில் இயக்கினால், பயனுள்ளதாக இருக்கும். மதுரை கோட்ட நிர்வாகிகள் இது குறித்து முன்னதாகவே ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநி-பாலக்காடு சிறப்பு ரயில் இயக்கினால், கேரளாவிலிருந்து வரும் பக்தர்களும் பயன்பெறுவார்கள்.இவ்வாறு, பயணிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X