பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் புத்தாண்டையொட்டி விபத்துகளை கட்டுப்படுத்த, போலீசார் நுாதன விழிப்புணர்வு மேற்கொண்டனர்.பொள்ளாச்சி போலீஸ் சரகத்தில், புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று வரை விபத்துகளை கட்டுப்படுத்த போலீசார் திட்டமிட்டனர். இதற்காக, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 'ரிசப்ஷன் பாயின்ட்' அமைக்கப்பட்டது. அதில், பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் பிரிவில், நுாதன முறையில் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்தவர்கள், ெஹல்மெட் அணியாத வாகன ஓட்டுனர்கள், செல்போனில் பேசியபடி வாகனங்களில் வந்தவர்களுக்கு, வீடியோ வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.விபத்துகளில் இறந்தவர்களின் குடும்ப நிலை, விபத்துகள் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இதனை, எஸ்.பி., அருளரசு ஆய்வு செய்து, வாகன ஓட்டுனர்களிடம், அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். டி.எஸ்.பி., சிவக்குமார், இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.எஸ்.பி., ஆய்வுவால்பாறை உட்கோட்டத்தில் காடம்பாறை, வால்பாறை, முடீஸ், ேஷக்கல்முடி ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இந்நிலையில், போலீஸ் ஸ்டேஷன்களில் நேற்று, மாவட்ட எஸ்.பி., அருளரசு ஆய்வு செய்தார்.முன்னதாக, போலீஸ் ஸ்டேஷன் வந்த எஸ்.பி.,யை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். குற்றச்சம்பவங்கள் குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலை குறித்தும் போலீசாரிடம் கேட்டறிந்தார். அதன்பின் போலீசாரிடன் குறை கேட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE