உடுமலை:தைப்பொங்கல் திருநாள் நெருங்கி வரும் நிலையில், உடுமலை பகுதிகளில், சுண்ணாம்பு உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. மூலப்பொருட்கள் விலை உயர்வு, விற்பனை குறைவு காரணமாக,பாரம்பரிய தொழில் நலிந்து வருகிறது.உடுமலை அருகே, ஜல்லிபட்டி, ஆலாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பாரம்பரியமாக சுண்ணாம்பு உற்பத்தி செய்யும் சூளைகள் காணப்பட்டன.இப்பகுதி ஓடைகளில் கிடைக்கும் வெள்ளை பாறைக்கற்கள், சுண்ணாம்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. அவற்றை, சிறு, சிறு கற்களாக உடைத்து, அவற்றை சூளைகளில் வேக வைத்து சுண்ணாம்பு உற்பத்தி செய்யப்படுகிறது. சூளைகளில் இட்டு, கற்கள் வேக வைக்க, கரிக்கட்டைகள், விறகு மற்றும் தேங்காய் மட்டைகள் பயன்படுத்தப்படுகிறது.பாரம்பரியமான சுண்ணாம்புக்கற்கள், கட்டடங்களுக்கு சுருக்கிப்போடுதல், பட்டுப்புழு வளர்ப்பு மனைகள், கோழிப்பண்ணைகள், தென்னை மரங்கள் மற்றும் இன்றளவும் கிராமங்களில் வெள்ளையடிக்கவும் சுண்ணாம்பு பயன்படுத்தப்படுகிறது.இதனால், ஆண்டு முழுவதும் குறைந்த உற்பத்தி இருக்கும் நிலையில், பொங்கல் பண்டிகைக்கு சீசன் களை கட்டும். கூடுதலாக, சுண்ணாம்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை நெருங்குவதால், தற்போது, சூளைகளில் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது.உற்பத்தியாளர்கள் கூறியதாவது:தொழில் நுட்ப வளர்ச்சியால் சுண்ணாம்பு பயன்பாடு குறைந்ததால், உற்பத்தி செய்யும் சூளைகள் குறைந்தன. பாரம்பரிய முறையை மாற்றாமல், இன்றளவும் பலர் சுண்ணாம்பு அடித்து வருகின்றனர். தென்னை மரங்களுக்கு அடிப்பது, பட்டுப்புழு, கோழிப்பண்ணைகள் என மாற்று பயன்பாட்டிலும் உள்ளது.வேக வைத்த சுண்ணாம்புக்கற்கள் ஒரு வல்லம், 50 ரூபாய்க்கும், பொடிகள் கிலோ, 10 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.மூலப்பொருட்கள் விலை உயர்வு, பாரம்பரிய தொழிலை காக்கும் வகையில், அரசு சிறு, குறு தொழில் பட்டியலில் இணைந்து, கடன் வழங்காதது உள்ளிட்ட காரணங்களினால், தொழில் நலிந்து வருகிறது. பாரம்பரிய தொழிலை மீட்க அரசு உதவ வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE