தம்மம்பட்டி:உலிபுரத்தில் 489 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு நவகண்ட சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம் ஆத்துார் அடுத்த தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் சுவேத நதி தென் கரையில் 16ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோவில் சேதமடைந்தது. இதனால் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்கோவில் முன் இரு கல்வெட்டு விவசாய தோட்டத்தில் இரு நவ கண்ட சிலைகள் கண்டறியப்பட்டு கடந்த டிச. 25ல் சேலம் வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் வீரராகவன் பொன்.வெங்கடேசன் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:கல்வெட்டு முன்புறம் சூரியன் பிறை நிலா சூலம் ஆகியவற்றுடன் 'ஸ்வஸ்திஸ்ரீ சகாப்தம்' என எழுத்துகள் உள்ளன. மறுபுறம் 13 வரிகளுடன் அம்பலத்தடி நாயனார் கோவில் என குறிப்பிடப்பட்டுள்ளது.பல்லவர் காலம் முதல் நவகண்டமுறை இருந்துள்ளது. சுயபலி கொடுக்கும் வீரருக்கு நவகண்டம் பெயரில் நடுகல் வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் எந்த குறிப்பும் இல்லை. இவை 3 அடி உயரம் நேரான கொண்டை முடிச்சு காதில் அணிகலன் உள்ளன. இடது கையில் நீண்ட வாளில் கழுத்தை அறுப்பது போல் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE