பொது செய்தி

தமிழ்நாடு

பாழாகக் கூடாது மண்: இது தான் நமக்கெல்லாம் கண்: இயற்கை விவசாயத்தில் 'பாடம்' நடத்தும் ஆசிரியர்

Updated : ஜன 02, 2021 | Added : ஜன 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
இயற்கையின் வளம் குறித்து அறிந்து கொள்வதில், விவசாயம் முக்கியம் இடம் பிடிக்கிறது. அறிவைத் தேடும் வளத்தை கற்றுக் கொடுப்பது ஆசிரியப் பணி. இவை இரண்டும் எனக்கு அத்துப்படி என்கிறார், பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராமசாமி.இவர், அரசு பள்ளியில், தலைமை ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். தற்போது, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் ஊராட்சி,
பாழாகக் கூடாது மண்: இது தான் நமக்கெல்லாம் கண்: இயற்கை விவசாயத்தில் 'பாடம்' நடத்தும் ஆசிரியர்

இயற்கையின் வளம் குறித்து அறிந்து கொள்வதில், விவசாயம் முக்கியம் இடம் பிடிக்கிறது. அறிவைத் தேடும் வளத்தை கற்றுக் கொடுப்பது ஆசிரியப் பணி. இவை இரண்டும் எனக்கு அத்துப்படி என்கிறார், பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராமசாமி.

இவர், அரசு பள்ளியில், தலைமை ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். தற்போது, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் ஊராட்சி, வரப்பாளையம் கிராமத்தில், பொன்னுாத்து செல்லும் வழியில், அங்கக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். வயது 82.அங்கக விவசாயத்தின் மீது தனக்கு ஏற்பட்ட ஆர்வத்தையும், அதைத் தொடர்ந்து தான் மேற்கொண்ட பணிகள் குறித்தும் விவரிக்கிறார், ராமசாமி வாத்தியார்.

நான் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, என் மனைவி தோட்டத்தை முழுவதுமாக பராமரித்து வந்தார். 1997ல் ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், முழுவதுமாக விவசாய தொழில் மீது கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன். அவ்வப்போது நடக்கும் வேளாண் தொடர்பான கருத்தரங்கு, கண்காட்சிகளில் பங்கேற்றேன்.அப்போது ரசாயன உரத்தால் ஏற்படும் தீங்குகள், அதனால் மண் பாழாகும் விதம் குறித்து தெளிவாக அறிந்து கொண்டேன். இப்படியே விட்டால், மண் நாசமாகி, வரும் தலைமுறைக்கு எதுவும் இல்லாமல் போய்விடும் என வருந்தினேன்.கிடைத்தது சான்றிதழ்அங்கக மற்றும் இயற்கை பண்ணையாக என் தோட்டத்தை மாற்ற முடிவு செய்தேன்.

முதற்கட்டமாக 2007ல், தோட்டத்தில் பெரும்பான்மையான இடங்களில் சொட்டுநீர் பாசனம் அமைத்தேன். படிப்படியாக அங்கக மற்றும் இயற்கை விவசாயத்துக்கு மாறி, 2013 முதல் முழுமையான இயற்கை விவசாயி என்ற அந்தஸ்துக்கு என்னை மாற்றிக் கொண்டேன். 2014ம் ஆண்டு சான்றளிப்பு துறையில் இயற்கை விவசாயி சான்றிதழ் பெற்றேன்.இயற்கை விவசாயத்துக்கு என்னென்ன வகையான உரங்கள் வேண்டும்; அதற்கான மூலப்பொருட்கள் என்ன என்பது குறித்து ஆராய்ந்து, நானே சிலவகை தொழில்நுட்பங்களை உருவாக்கி, பயிர்களுக்கு தேவையான உரங்களை உற்பத்தி செய்ய துவங்கினேன்.

'அசோஸ்பைரில்லம்', 'பாஸ்போபாக்டீரியா' உள்ளிட்ட உயிர் உரங்களை, சாணத்துடன் கலந்து, அதை மூட்டையாக கட்டி பல்வேறு அடுக்கு வடிகட்டிகள் கொண்ட தொட்டியில் போட்டு விடுவேன். அது ஒரு சில நாளில் நன்கு மக்கி, அதிலிருந்து வெளியேறும் நீர், வடிகட்டி வழியாக கீழே வந்து அதற்குரிய தொட்டியில் சேரும். பின்னர், அது முறைப்படி வடிகட்டி, மோட்டார் மற்றும் சொட்டுநீர் குழாய் வழியாக, வயல்வெளிக்கு அனுப்புவேன்.

இதனால் பயிர்களுக்கு தேவையான உயிர் உரங்கள், எவ்வித வேலையாட்கள் உதவி இன்றி நேரடியாக பயிர்களுக்கு செல்கிறது. இதனால் பயிர்கள் செழித்து வளர்ந்தன. சில அடிப்படையான பணிகளுக்கு மட்டும் ஆட்களை பயன்படுத்திக் கொள்வேன்.சாகுபடியில் வெற்றிநிலத்தில் சணப்பு, நவதானியங்கள், எண்ணெய் வித்துக்களை பயிர்செய்து அதை உழவு போட்டு விட்டு, சில நாட்களுக்கு பின், நிலத்தை மட்டம் செய்து, பார் பிடித்து, உழுது பயிர்கள் நடுவேன். இதனால் மண்ணிலுள்ள உயிர் சத்துக்களால் பயிர்கள் நன்கு விளையும். வாழையும், தென்னையும் பயிரிட்டுள்ள இடங்களில் களை எடுத்தவுடன், அதை மூடாக்கு மாதிரி போட்டு விடுவேன்.தென்னைக்கு மாட்டு சாணத்தில் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனஸ், வேப்பம் புண்ணாக்கு கலந்து, மரத்துக்கு, 500 கிராம் வீதம் உரமாக கொடுத்து விடுவேன். பூ பிடிக்கும் சமயங்களில் பஞ்சகவ்யாவை தெளித்து விடுவேன்.

வேறு எந்த ரசாயன உரத்தையும் கொடுப்பதில்லை. மேலும், தென்னைக்கு நடுவே வாழை பயிரிடுகின்றேன். இதேபோல, மிளகு, மஞ்சள் உள்ளிட்டவைகளை பயிர் செய்து வருகிறேன்.ஊடுபயிர் சாகுபடியில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளேன். தவிர, எனது பண்ணையில் மாடுகளை வளர்த்து வருகிறேன். மாடுகளின் சாணம், கோமியம் ஆகியவற்றை தொட்டியில் சேர்த்து, அதை வடிகட்டி, வயல்வெளிக்கு கொண்டு செல்லும் வகையில் அமைப்பு ஏற்படுத்தியுள்ளேன். இத்தொழிலில் லாபம் கிடைக்கிறதோ, இல்லையோ, மக்களுக்கு எவ்வித ரசாயனக் கலப்பும் இல்லாத, அரசாங்கத்தால் சான்றளிக்கப்பட்ட பழம், காய்கறி உட்பட இதர பொருட்களை உற்பத்தி செய்து தருகிறோம் என்ற மனநிறைவு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஜன-202110:53:07 IST Report Abuse
சம்பத் குமார் ஜயா தங்கள் குலம் செழித்து ஓங்குக. இம்மாதிரியான விவசாய பாடத்திட்டங்களை பள்ளியில் இருந்தே மாணவர்கள் பயிலும் படியான கல்வி திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டும். நன்றி ஜயா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X