குன்னுார்:குன்னுாரில் தயாரிக்கப்படும் 'சில்வர் டிப்' தேயிலைத் துாள் கிலோ 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகளிடம் பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்படுகிறது. 100 தொழிற்சாலைகளில் டஸ்ட் ஆர்தோடக்ஸ் ரக துாள் உற்பத்தி செய்யப்படுகிறது.மேலும் அதிக விலை தரும் சிறப்பு தேயிலைத் துாள் தயாரிக்கவும் தேயிலை வாரியம் ஊக்குவிக்கிறது. குன்னுார் அருகே பில்லிமலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கிரீன் டீ சில்வர் டிப் டீ ஆகியவற்றுடன் அஸ்வகந்தா உட்பட பல்வேறு மருத்துவ குணம் கொண்ட சில பொருட்களுடன் தேயிலைத் துாள் தயாரிக்கப்படுகிறது.
இதில் கிரீன் டீ 2500 ரூபாய் சில்வர் டிப் டீ கிலோ 24 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. தொழிற்சாலை உற்பத்தி செயல் மேலாளர் விஜயசேகரா கூறுகையில் ''நீலகிரி தேயிலைத் துாள் வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதில் தரம் சுவையுடன் மருத்துவ குணம் கொண்ட பொருட்களை சேர்ப்பது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனோ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 'காசா' சிறப்பு தேயிலைக்கு மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE