புதுடில்லி:சீன எல்லையில் ஐ.டி.பி.பி. எனப்படும் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படை போலீஸ் டி.ஜி.பி. தேஸ்வால் ஆய்வு நடத்தினார்.
நாட்டில் லடாக் முதல் கிழக்கு பகுதியில் உள்ள அருணாச்சல பிரதேசம் வரை சீனாவுடனான 3488 கி.மீ. எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் ஐ.டி.பி.பி. எனப்படும் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படை போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கின்றனர்.இந்நிலையில் சீன எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக இப்பிரிவின் டி.ஜி.பி. எஸ்.எஸ்.தேஸ்வால் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
கடைசி நாளான நேற்று உத்தரகண்டின் எல்லை மாவட்டமான சாமோலி சென்றார்.அங்கு 11 ஆயிரம் அடி உயரத்தில் மானாவில் அமைந்துள்ள படையினரின் முகாமை அவர் பார்வையிட்டார். பின் பணியில் உள்ள பாதுகாப்பு படையினரிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார்.இதன்பின் அதே பகுதியில் உள்ள பத்ரிநாத் மற்றும் ஆலி பகுதிகளையும் அவர் ஆய்வு செய்தார். அத்துடன் பனிச்சறுக்கு முறையில் சக வீரர்களுடன் 20 கி.மீ. பயணித்து 12 ஆயிரத்து 460 அடி உயரத்தில் உள்ள குர்சான் பகுதியின் உச்சிக்கு சென்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE