சென்னை:சமூக விரோதிகளின் புகைப்படங்களை கொண்டு 'மை ஸ்டாம்ப்' திட்டத்துக்கு விண்ணப்பிப்பதால் ஆவணங்களை முறையாக சரிபார்க்க தபால் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
வாடிக்கையாளர் புகைப்படங்களை ஸ்டாம்பில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் 'மை ஸ்டாம்ப்' திட்டத்தை 2011ல் தபால் துறை அறிமுகப்படுத்தியது. இதில் தங்கள் படம் அலுவலக அடையாள சின்னம் என விரும்பும் படங்களை இணைத்து அனுப்பலாம். 300 ரூபாய் கட்டணத்தில் 5 ரூபாய் மதிப்புள்ள 12 புகைப்படங்களுடன் கூடிய தபால் தலைகள் அடங்கிய அட்டை வழங்கப்படும்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் தலைமை அஞ்சல் நிலையத்தில் குற்றவாளி இருவரின் புகைப்படத்துடன் மை ஸ்டாம்ப் வெளியிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.சம்பந்தமில்லாத வேறொருவர் விண்ணப்பித்த நிலையில் அடையாள ஆவணங்களை சரியாக பார்க்காமல் தபால் தலைகள் வழங்கப்பட்டது விசாரணையில் தெரிந்தது.
இதையடுத்து மை ஸ்டாம்ப் திட்டத்துக்கு பதிவு செய்யும்போது விண்ணப்பம் புகைப்படம் மற்றும் அடையாள ஆவணங்கள் சரியாக சமர்ப்பிக்கப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என தபால் துறை உத்தரவிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE