மூணாறு:கேரளா சாந்தாம்பாறையில் துப்பாக்கியை காட்டி மிரட்டியவர்களுக்கு சாதகமாக விசாரணை அறிக்கையில் திருத்தம் செய்த இடுக்கி குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ரமேஷ்குமார் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறையில் நடிகை கே.ஆர். விஜயாவுக்கு சொந்தமான ஏலத்தோட்டத்தை கேரள சிறுபான்மை குழு உறுப்பினர் ஜான்ஜோசப் வாங்கினார். அதனால் ஏற்பட்ட கடன்களை செலுத்த முடியாததால் திருச்சூரைச் சேர்ந்த அப்துல்காதரிடம் தோட்டத்தை விற்றார். வங்கி கடனை செலுத்த வேண்டும் என ஒப்பந்தமிடப்பட்டதை அப்துல்காதர் பின்பற்றாததால் தோட்டத்தை மீட்க ஜான்ஜோசப் முயன்றார்.
2020 மே 16ல் சிலருடன் தோட்டத்திற்குச் சென்ற அப்துல்காதர் ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டினார். அந்த வழக்கில் அப்துல்காதர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சாந்தாம்பாறை இன்ஸ்பெக்டருக்கு இடுக்கி எஸ்.பி. உத்தரவிட்டார்.
அந்த அறிக்கையை அப்துல்காதர் தரப்பினருக்கு சாதகமாக திருத்தம் செய்து மூணாறு மாஜி டி.எஸ்.பி.யும் தற்போதைய இடுக்கி குற்றப்பிரிவு டி.எஸ்.பி.யுமான ரமேஷ்குமார் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். எனவே அவரை பணியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்து துறை ரீதியான விசாரணைக்கு உள்துறை உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE