தேனி:தேனி மாவட்டத்தில் நேற்று 6 பேர் 'டிஸ்சார்ஜ்' ஆகினர். இதுவரை 16,637 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று புதிதாக 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 16,902 ஆக உயர்ந்தது. பலி 322ஆக உள்ளது.
மதுரை
மதுரை மாவட்டத்தில் நேற்று21 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதுவரை 19,939பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக18பேர் பாதிக்கப்பட்டனர். ஒருவர் பலியானார். மொத்த பாதிப்பு 20,548ஆகும். இதுவரை 453பேர் இறந்துள்ளனர். தற்போது156பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் 19 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 10,610 ஆக அதிகரித்தது. நேற்று புதிதாக 16 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 10, 961 ஆக உயர்ந்தது. தற்போது 154 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 197 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று நான்கு பேர் மீண்டனர். 2 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டது. 26 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒருவர் இறந்ததால் பலி எண்ணிக்கை 133 ஆனது. 6324 பேர் பாதிக்கப்பட்டதில் 6165 பேர் குணமடைந்தனர்.
சிவகங்கை
சிவகங்கைஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். ஒருவருக்கு கொரோனா கண்டறியப் பட்டது. 6539 பேர் பாதிக்கப்பட்டனர்.6341 பேர் குணமடைந்தனர். 72 பேர் சிகிச்சையில் உள்ளனர். 126 பேர் பலியாகியுள்ளனர்.
விருதுநகர்
விருதுநகரில் 9 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். 12பேருக்கு கொரோனா உறுதியானது. பாதிக்கப்பட்ட 16,351 பேரில் 16 ,022 பேர் குணமடைந்தனர்.115 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
திருநெல்வேலி
திருநெல்வேலியில் 19 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 14,971 பேர் குணம் அடைந்து உள்ளனர். நேற்று 10 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 15,303 ஆனது. தற்போது 121 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 211 பேர் இறந்துள்ளனர்.
தென்காசி
தென்காசியில் நேற்று 8 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் 8064 பேர் குணம் அடைந்து உள்ளனர்.நேற்று 9 பேருக்கு உறுதியானதால் பாதிப்பு 8272 ஆனது. தற்போது 50 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 158 பேர் இறந்துள்ளனர்.
துாத்துக்குடி
துாத்துக்குடியில் நேற்று 9 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் 15,861 பேர் குணம் அடைந்து உள்ளனர். நேற்று 12 பேருக்கு கொரோனா உறுதியானது. பாதிப்பு 16,084 ஆனது. தற்போது 82 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 141 பேர் இறந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE