திருப்பூர்:'ஜவுளித்துறையினர் இணைந்து, நுால் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்,' என, ஏ.இ.பி.சி., அறிவுறுத்தியுள்ளது.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல் வெளியிட்டு உள்ள அறிக்கை:கடந்த டிச., 25ல், அனைத்து ஜவுளி சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற, நுால் விலை உயர்வு குறித்து, கலந்துரையாடல் நடத்தப்பட்டது. 'ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, தட்டுப்பாடு இன்றி நுால் வழங்குவதை உறுதி செய்யவேண்டும்;
அடுத்த இரண்டு மாதங்களுக்கு நுால் விலையை உயர்த்த கூடாது' என, அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.ஆனால், நுாற்பாலைகள், தற்போது நுால் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளன. இதனால், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள், கையிருப்பு ஆர்டர்களை முடிப்பதிலும், புதிய ஆர்டர் பெறுவதும் சிக்கலாகி விட்டது. தொழில் நலன் கருதி, நுால் விலை உயர்வை வாபஸ் பெறவேண்டும். ஜவுளி துறையினர் இணைந்து, தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE