பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில் திரண்ட மக்கள் புத்தாண்டில் குதுாகலம்

Added : ஜன 02, 2021
Share
Advertisement
ஊட்டி:ஊட்டியில், புத்தாண்டு கொண்டாட சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டனர்.ஊட்டி, குன்னுார் உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஓட்டல்கள், காட்டேஜ்கள், லாட்ஜ்கள் நிரம்பியுள்ளன. பலர், சில வாரங்களுக்கு முன்பே, நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகளை முன்பதிவு செய்தனர்.சுற்றுலா பயணிகளை குஷிப்படுத்த, நடன, நாட்டிய நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள், பரிசுகள் என, புத்தாண்டு

ஊட்டி:ஊட்டியில், புத்தாண்டு கொண்டாட சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டனர்.

ஊட்டி, குன்னுார் உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஓட்டல்கள், காட்டேஜ்கள், லாட்ஜ்கள் நிரம்பியுள்ளன. பலர், சில வாரங்களுக்கு முன்பே, நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகளை முன்பதிவு செய்தனர்.சுற்றுலா பயணிகளை குஷிப்படுத்த, நடன, நாட்டிய நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள், பரிசுகள் என, புத்தாண்டு ஏற்பாடுகளை செய்வதில், ஓட்டல் நிர்வாகங்கள் முனைப்புக் காட்டின.

கொரோனா தொற்று காரணமாக, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு, அரசு தடை விதித்தது. இதனால், புத்தாண்டு நாளை இனிதாக கழிக்க, அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா உட்பட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம், கடந்த ஆண்டை விட அதிகரித்து காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X