பாட்னா: பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பை காட்டிலும் அவரது மகனின் சொத்து மதிப்பு ஐந்து மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
![]()
|
பீகார் மாநிலத்தல் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அமைச்சர்கள் சொத்துவிவரபட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: மாநில முதல்வராக இருந்து வரும் நிதிஷ்குமாரின் சொத்துமதிப்பு 12 மாடுகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அசையும் சொத்துமதிப்பு ரூ.16.53 லட்சம் எனவும், தலைநகர் டில்லியின் துவாரகா பகுதியில் உள்ள பிளாட்டின் அசையா சொத்துமதிப்பு ரூ.40 லட்சம் என தன்னுடைய சொத்துமதிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளார்.
நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்தின் சொத்துமதிப்பு ஐந்து மடங்கு அதிகமாக தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பிர்லா தொழில்நுட்பகல்லூரியில் இன்ஜினியரிங் பட்டம் பெற்று தற்போது தொழிலதிபராக இருந்து வருகிறார். இவரது சொத்துமதிப்பாக அசையும் சொத்து ரூ1.57 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ.1.48 கோடி இவை தவிர 2016ம் ஆண்டு மாடல் நான்கு சக்கரவாகனம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் தந்தையை விட இவரது சொத்து மதிப்பு ஐந்துமடங்கு அதிகமாக உள்ளது.
![]()
|
மேலும் நிதிஷ் அமைச்சரவையில் கால்நடை துறை அமைச்சராக உள்ள விகாஷீல் இன்சான் கட்சி தலைவர் முகேஷ் சாஹ்னியின் சொத்த மதிப்பு 12.34 கோடி ரூபாய் ஆகும்.இவர்தான் பணக்கார அமைச்சராவார்.
பொதுசுகாதாரத்துறை அமைச்சரான ராம் பிரித் பஸ்வானின் சொத்து மதிப்பு ரூ.95 லட்சம். இவர் தான் அமைச்சர்களில் குறைந்த சொத்து மதிப்பு கொண்டுள்ள ஏழ்மையானவராக கூறப்படுகிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement