புதுடில்லி:'மிஸ்டு கால்' கொடுத்து, சமையல் காஸ் சிலிண்டர் பதிவு செய்யும் வசதியை, 'இந்தியன் ஆயில்' நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சமையல் காஸ் சிலிண்டர்கள், தற்போது மொபைல் போனில், 'வாய்ஸ் கால்' வழியாக பதிவு செய்யப்
படுகின்றன. ஆனால், இதில் வயதானவர்களுக்கும், கிராமங்களில் உள்ளவர்களுக்கும் சிரமம் இருப்பதாக தெரிய வந்தது.
இதையடுத்து, 'மிஸ்டு கால்' கொடுத்து, சிலிண்டர் பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. '8454955555' என்ற எண்ணுக்கு, மிஸ்டு கால் கொடுத்தால், சிலிண்டர் பதிவு
செய்யலாம். நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும், இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், இந்த வசதியை, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், துவக்கிவைத்தார். அப்போது அவர் கூறியதாவது:இந்தியன் ஆயில்
நிறுவனம், டில்லியில் கடந்த மாதம், உலகத் தரம் வாய்ந்த பெட்ரோலை அறிமுகப்படுத்தியது.தற்போது, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கோல்கட்டா, கொச்சி, இந்துார், புவனேஸ்வர் ஆகிய நகரங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுஉள்ளது.
கடந்த, 2014ம் ஆண்டுக்கு முன் வரை, 13 கோடி எரிவாயு இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன. கடந்த ஆறுஆண்டுகளில இது, 30 கோடியாக அதிகரித்துஉள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE