புதுடில்லி:'இரண்டு
சரக்கு கப்பல்களில் சிக்கியுள்ள இந்தியர்கள், 39 பேரை உடனடியாக
விடுவிக்க உதவ வேண்டும்' என, சீனாவிடம், மத்திய அரசு வலியுறுத்தி
உள்ளது.
நம் அண்டை நாடான சீனாவின் ஜிங்டங் துறைமுகம் அருகே, 'ஜக் ஆனந்த்' என்ற கப்பல், 2020, ஜூன் முதல் நிறுத்தப்பட்டு உள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த, 23 பேர் உள்ளனர்.
உதவ தயார்
இதேபோல,
கோபிடியன் துறைமுகம் அருகே, நான்கு மாதங்களாக, 'அனஸ்தாஸியா' என்ற
கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த, 16 பேர்
உள்ளனர்.சீன அரசின் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் காரணமாக, இந்த கப்பல்கள் துறைமுகங்களில் நுழைய முடியாமல் உள்ளன.
இது குறித்து, வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறியதாவது:
சரக்கை இறக்க முடியாமல் நங்கூரமிட்டுஉள்ள
இரு கப்பல்களில் உள்ள இந்தியர்கள், 39 பேரை விடுவிக்க, சீன
வெளியுறவு அமைச்சகம் மற்றும் மாகாண அரசுகளுடன் தொடர்ந்து பேசி
வருகிறோம்.சீனாவும் உதவ தயாராக உள்ளதாக தெரிவித்துஉள்ளது. இந்த பிரச்னையை,
இந்திய துாதர், சீன வெளியுறவு துறை அமைச்சரின் கவனத்திற்கு, நேரடியாக கொண்டு சென்றுள்ளார்.
வலியுறுத்தல்
கப்பல்களில் உள்ள சரக்கை, துறைமுகங்களில் இறக்க ஒப்புதல் அளிக்கும்படியும், அது
முடியாத பட்சத்தில், 39 பேரும் துறைமுகத்திற்குள் வர அனுமதிக்கும் படியும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.கப்பல் ஊழியர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE