சுட்டுக் கொல்லப்பட்ட இருவருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு

Added : ஜன 02, 2021
Share
Advertisement
ஸ்ரீநகர்:காஷ்மீரில், பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மூவரில், இருவருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது அம்பலமாகிஉள்ளது.ஜம்மு - காஷ்மீரில், பரிம்போரா பகுதியில் பதுங்கியிருந்த மூன்று பேர், பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 'அவர்கள் அப்பாவிகள்' என, குடும்பத்தார் தெரிவித்துஇருந்தனர்.இதையடுத்து, பாதுகாப்பு படையினரை கண்டிக்கும்

ஸ்ரீநகர்:காஷ்மீரில், பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மூவரில், இருவருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது அம்பலமாகிஉள்ளது.

ஜம்மு - காஷ்மீரில், பரிம்போரா பகுதியில் பதுங்கியிருந்த மூன்று பேர், பாதுகாப்பு
படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 'அவர்கள் அப்பாவிகள்' என, குடும்பத்தார் தெரிவித்துஇருந்தனர்.இதையடுத்து, பாதுகாப்பு படையினரை கண்டிக்கும் வகையில்,
எதிர்க்கட்சிகள், காஷ்மீரில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தின.

இந்நிலையில், காஷ்மீர் போலீஸ் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறப்பட்டு உள்ளதாவது:பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட மாணவர் அய்ஜஸ் மக்பூல் கனய், பல்கலைக்கு விண்ணப்பம் வாங்கச் சென்றதாக, அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தொலைதொடர்பு துறை மற்றும் நவீன உத்திகளை பயன்படுத்தி புலனாய்வு
செய்ததில், அது பொய் என்பது தெரிய வந்துள்ளது.

கனயும், அதர் முஷ்டாக் என்பவரும், ஐதர்போரா சென்றுள்ளனர். அங்கிருந்து, பரிம்போராவுக்கு வந்துள்ளனர். இருவருக்கும் தற்போது, 'தடுப்பு முன்னணி' என பெயர் மாற்றம் செய்யப்பட்ட லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது. அந்த அமைப்பிற்காக சரக்கு போக்குவரத்து உதவிகளை, இருவரும் செய்து வந்துள்ளனர். கடந்த ஆண்டு, பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட, லஷ்கர் பயங்கரவாதி, பைசல் முஷ்தாக் பாபாவை, கனய் சந்தித்து பேசியுள்ளார்.

இதை, தற்போது போலீஸ் பிடியில் உள்ள ஒரு பயங்கரவாதி ஊர்ஜிதப் படுத்தியுள்ளார்.
மற்றொரு இளைஞரான ஜுபைர் லோன், முதலில் புல்வாமா சென்று, அங்கிருந்து
அனந்தநாக்கிற்கும், அதன் பின் ஷோபியனுக்கும் சென்று, மீண்டும் புல்வாமா திரும்பியுள்ளார். இறுதியில், அவர் பரிம்போரா வந்துள்ளார். இது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.

பாதுகாப்பு படையினர், முதலில் பயங்கரவாதிகளை சரணம் அடையும்படி தான்
வலியுறுத்தினர். அவர்கள் வர மறுத்தனர். பின், மீண்டும் மறுநாள் காலையில் சரணடைய வாய்ப்பு வழங்கப்பட்டது.அப்போது, அவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கையெறிகுண்டுகளை வீசினர். இதையடுத்து தான், அவர்கள் மூவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X