பொது செய்தி

இந்தியா

குஜராத் பூங்காவில் மர்ம உலோகத் தூண்?

Updated : ஜன 02, 2021 | Added : ஜன 02, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
ஆமதாபாத்: பல்வேறு நாடுகளில் தோன்றிய திடீர் உலோகத் துாண்களால், மக்கள் பீதியடைந்துள்ள நிலையில், குஜராத்தில் உள்ள பூங்கா ஒன்றில், அதேபோன்ற ஓர் உலோக துாண் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில், 'மோனோலித்' எனப்படும், மூன்று பக்கங்களை உடைய, மர்ம உலோகத் துாண், நவம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இது, உலகம்

ஆமதாபாத்: பல்வேறு நாடுகளில் தோன்றிய திடீர் உலோகத் துாண்களால், மக்கள் பீதியடைந்துள்ள நிலையில், குஜராத்தில் உள்ள பூங்கா ஒன்றில், அதேபோன்ற ஓர் உலோக துாண் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.latest tamil news


அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில், 'மோனோலித்' எனப்படும், மூன்று பக்கங்களை உடைய, மர்ம உலோகத் துாண், நவம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இது, உலகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்ற துாண்கள், மேலும், 30 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த துாண்கள் குறித்து, தொடர்ந்து மர்மங்கள் நிலவி வருகின்றன.இந்நிலையில், நம் நாட்டிலும், அதுபோன்ற ஒரு உலோகத் துாண், கண்டுபிடிக்கப்பட்டுஉள்ளதாக, தகவல் வெளியானது.


latest tamil news


குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள ஒரு பூங்காவில், அந்த துாண், நேற்று முன்தினம் திடீரென காணப்பட்டது. மாநில முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான விஜய் ரூபானியால் திறந்துவைக்கப்பட்ட இந்த பூங்காவை, ஆமதாபாத் மாநகராட்சி நிர்வாகமும், 'சிம்பனி லிமிெடட்' என்ற தனியார் நிறுவனமும் இணைந்து நிர்வகித்து வருகின்றன. மற்ற நாடுகளில் இருந்த துாண்களைப் போல், இந்த துாண் விஷயத்தில், எந்த மர்மமும் இல்லை.

இதை, சிம்பனி லிமிெடட் நிறுவனம், நிறுவியுள்ளது. பூங்காவுக்கு, அதிக பார்வையாளர்களை வரவழைக்கவே, இந்த துாண் நிறுவப்பட்டதாக, நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூங்காவில், 7 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள அந்த உலோக துாணை காண, மக்கள் குவிகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
02-ஜன-202113:10:06 IST Report Abuse
S. Narayanan There is no suspense. To make money they will tell you many stories like this.
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
02-ஜன-202111:13:05 IST Report Abuse
ShivRam ShivShyam theeviravaadham
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
02-ஜன-202109:33:24 IST Report Abuse
ShivRam ShivShyam இவங்க ஒபெனாவே பண்றங்க ..அவ்ளோ தான் வித்யாசம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X