சென்னை: இன்று முதல், 5ம் தேதி வரை, சில மாவட்டங்களில், மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அந்த மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் சில இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.வரும், 4ம் தேதி, தமிழக தென் மாவட்டங்களில், சில இடங்களில் மிதமான மழை பெய்யும்; 5ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். அதிகபட்சம், 30; குறைந்த பட்சம்,23 டிகிரி செல்ஷியஸ் பதிவாகும். நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், பாபநாசம், 9; அம்பாசமுத்திரம், 8; சமயபுரம், மணிமுத்தாறு, மண்டபம், 7; குன்னுார், குடவாசல், திண்டுக்கல் நத்தம், 6; விராலிமலை, பாம்பன், கொடுமுடி, ராமேஸ்வரம், 5 செ.மீ., மழை பெய்துள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE