பொது செய்தி

தமிழ்நாடு

'மை ஸ்டாம்ப்'ல் சமூக விரோதிகள்: ஆவணம் சரிபார்க்க உத்தரவு

Added : ஜன 02, 2021
Share
Advertisement
கோவை:சமூக விரோதிகளின் புகைப்படங்களை கொண்டு, 'மை ஸ்டாம்ப்' திட்டத்துக்கு விண்ணப்பிப்பதால், ஆவணங்களை முறையாக சரிபார்க்க தபால் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.வாடிக்கையாளர் புகைப்படங்களை ஸ்டாம்பில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், 'மை ஸ்டாம்ப்' திட்டத்தை, 2011ல் தபால் துறை அறிமுகப்படுத்தியது. இதில், தங்கள் படம், அலுவலக அடையாள சின்னம் என விரும்பும் படங்களை இணைத்து

கோவை:சமூக விரோதிகளின் புகைப்படங்களை கொண்டு, 'மை ஸ்டாம்ப்' திட்டத்துக்கு விண்ணப்பிப்பதால், ஆவணங்களை முறையாக சரிபார்க்க தபால் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.வாடிக்கையாளர் புகைப்படங்களை ஸ்டாம்பில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், 'மை ஸ்டாம்ப்' திட்டத்தை, 2011ல் தபால் துறை அறிமுகப்படுத்தியது. இதில், தங்கள் படம், அலுவலக அடையாள சின்னம் என விரும்பும் படங்களை இணைத்து அனுப்பலாம். 300 ரூபாய் கட்டணத்தில், ஐந்து ரூபாய் மதிப்புள்ள, 12 புகைப்படத்துடன் கூடிய தபால்தலைகள் அடங்கிய அட்டை வழங்கப்படும்.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் தலைமை அஞ்சல்நிலையத்தில், குற்றவாளி இருவரின் புகைப்படத்துடன் மை ஸ்டாம்ப் வெளியிடப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது.சம்பந்தமில்லாத வேறொருவர் விண்ணப்பித்த நிலையில், அடையாள ஆவணங்களை சரியாக பார்க்காமல் தபால்தலைகள் வழங்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மை ஸ்டாம்ப் திட்டத்துக்கு பதிவு செய்யும்போது, விண்ணப்பம், புகைப்படம் மற்றும் அடையாள ஆவணங்கள் சரியாக சமர்ப்பிக்கப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என தபால் துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X