சென்னை : தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் 5வது கட்ட கருத்துக் கேட்பு கூட்டம் ஜன. 18 முதல் 20ம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது.
தி.மு.க. தலைமை அறிக்கை: வரும் சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கையை தயாரிக்க அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் எட்டு பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் ஏற்கனவே நான்கு கட்டங்களாக சுற்றுப்பயணம் செய்து தேர்தல் அறிக்கை அம்சங்கள் குறித்து பல்வேறு நிர்வாகிகளை சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக 5வது கருத்து கேட்புக் கூட்டம் வரும் 18 முதல் 20ம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 'தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் கிராமப்புற ஏழைகளுக்கு 3 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்' என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமருக்கு டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE