பொது செய்தி

தமிழ்நாடு

குன்னக்குடி பாலமுரளியின் இதமாக அமைந்த கச்சேரி!

Added : ஜன 02, 2021
Share
Advertisement
இதமான குரலிசையும், அதற்கிணையான விரலிசையில் வயலினும் சேரும்போது, ஒரு சுகமான கச்சேரி அமைந்து விடுவது இயல்பே!அதிலும், கச்சேரியின், ஆறு பாடல்களில் நான்கிற்கு சிறிதும் பெரிதுமாக, ராக ஆலாபனைகளுக்கு இடமளிக்கும் போது, இரு கலைஞர்களின் திறமையும், சரியான விகிதத்தில் வெளிப்படுகிறது.'பெடரேஷன் ஆப் சிட்டி சபாஸ்' அமைப்பின் சார்பில் நடந்த கச்சேரியில், பாடகர் குன்னக்குடி

இதமான குரலிசையும், அதற்கிணையான விரலிசையில் வயலினும் சேரும்போது, ஒரு சுகமான கச்சேரி அமைந்து விடுவது இயல்பே!அதிலும், கச்சேரியின், ஆறு பாடல்களில் நான்கிற்கு சிறிதும் பெரிதுமாக, ராக ஆலாபனைகளுக்கு இடமளிக்கும் போது, இரு கலைஞர்களின் திறமையும், சரியான விகிதத்தில் வெளிப்படுகிறது.

'பெடரேஷன் ஆப் சிட்டி சபாஸ்' அமைப்பின் சார்பில் நடந்த கச்சேரியில், பாடகர் குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணாவும், அவருடன் வயலின் வாசித்த அக்கரை சுபலக்ஷ்மியும், இந்த அனுபவத்தை தான் கொடுத்தனர்.பாலமுரளிகிருஷ்ணா மெயினாக எடுத்த 'கல்யாணி' ராகத்தில், அவர் காட்டிய நிதானமும், தொடர்ந்து வந்த சுறுசுறுப்பான பிடிகளும், பின்னர் மேல் ஸ்தாயிக்கும் மேல், அந்த ராகத்தை அவர் தொட்டுப் பாடிய விதமும், குறிப்பிடும்படியாக இருந்தன.எடுத்த பாடல், பாபநாசம் சிவன் இயற்றிய, 'வாயுகுமாரன் ஸ்ரீ ஹனுமான்...' அழகு சேர்த்தது.

இதில், நெரவலில் வந்த, 'நாவில் என்றும் ஸ்ரீராம நாமம்...' என்ற வரியை, அவர் கையாண்ட விதம். அளவான கணக்குகளுடன் கூடிய கற்பனை ஸ்வரங்கள், அவற்றுக்கு ஈடுகொடுத்த சுபலக்ஷ்மியின் வயலினுடன் ஒரு அழகிய ஸ்வரப்பந்தல் அமைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.தனியாவர்த்தனத்தில், தஞ்சாவூர் முருகபூபதி மிருதங்கத்திலும், ஸ்ரீசுந்தர்குமார் கஞ்சிராவிலும் அளவான தாள வேலைப்பாடுகளை அள்ளிக் கொடுத்தனர்.அதிக ஆரவாரமில்லாமல், தங்களுக்குள் இசைந்து மகிழ்ச்சியுடன் வாசித்தது, கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்து!

துவக்கத்தில், திருவொற்றியூர் தியாகய்யரின், 'சலமேல...' எனத் துவங்கும் தர்பார் வர்ணத்திற்கு முன் சிறிய ராக ஆலாபனை, அடுத்து வந்த, 'ஹரிஹரபுத்ரம்' என்ற முத்துஸ்வாமி தீக் ஷிதரின் கிருதிக்கு முன் சற்று விரிவான வஸந்தா ராகம்.பின், தியாகராஜரின் 'பரியாசகமா...' எனத் துவங்கும் பாடலுக்கு, வனஸ்பதி ராகத்தை இன்னும் சற்று அதிக விரிவாகவே பாடி, ராகங்களை அன்று நடனமாட விட்டார் பாலமுரளிகிருஷ்ணா.

இடையில் சற்றே விறுவிறுப்பான, 'ஸ்ரீ காந்தநீயெட...' என்ற, பவப்ரிய ராகத்தில் அமைந்த தியாகராஜரின் கீர்த்தனையும், முடிவில் பாடிய, 'ஜோன்புரி' ராகத்தில் பஞ்சாபகேச சாஸ்திரியின், 'ஸாபச்யத்கவுல்யா...'வும் ஆலாபனை இல்லாத தனிப்பாடல்களாக இருந்தன.சவுராஷ்ட்ர ராகத்தைக் கோடிட்டுக் காட்டிய போது, என்ன பாடல் வரப்போகிறது என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், மங்களம் பாடி அவர் முடித்தது, சற்று எதிர்பாராதது!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X