திருமங்கலம் : சாலை விபத்தில், கல்லுாரி மாணவர் உயிரிழந்தார்.
சென்னை, பாடி, மதியழகன் நகரைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம், 22; கல்லுாரி மாணவர். நேற்று அதிகாலை இருசக்கர வாகனத்தில், தன் நண்பர் கவுதமுடன் வெளியே சென்றார்.திருமங்கலம், இரண்டாவது அவென்யூ - 13வது பிரதான சாலை சந்திப்பு அருகே சென்றபோது, அவ்வழியாக சென்ற பஸ், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே இப்ராஹிம் உயிரிழந்தார்.திருமங்கலம் போக்குவரத்து போலீசார், இப்ராஹிம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கும், படுகாயமடைந்த கவுதமை சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கும் அனுப்பினர்.விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ் ஓட்டுனர் கார்த்திக், 40, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE