பல்லாவரம் : பல்லாவரத்தில், மின் வாரிய அதிகாரி மீது தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்லாவரம், மல்லிகா நகரில், நேற்று மதியம் மின் வினியோகத்தில் பழுது ஏற்பட்டது. அதை சரிசெய்வதற்காக, பல்லாவரம் மின் வாரிய அலுவலக இளநிலை பொறியாளராக உள்ள ஹரிஹரன், 38, ஊழியர்களுடன் அங்கு சென்றார்.அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், தகராறு செய்து, ஹரிஹரனை தாக்கியதாக கூறப்படுகிறது.இது குறித்து, பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையில், போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, மின் வாரிய ஊழியர்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE