பழநி : பழநி முருகன் கோயிலில் நேற்று அதிகாலையிலிருந்து பக்தர்கள் வருகை அதிகரித்திருந்தது.
பழநிக்கு வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாதயாத்திரையாக வரும் அவர்கள், மலைக்கோயிலில் குடமுழுக்கு மண்டபம் வழியே பொது தரிசனத்தில் காத்திருந்து முருகரை தரிசனம் செய்தனர். அலகு குத்தி, காவடிகள் எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன் செய்கின்றனர். இதனால் அடிவாரம் பகுதியில் வாகனங்கள் பெருமளவில் நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று மதுரை மாவட்டம் கோச்சடையை சேர்ந்த பக்தர்கள் 22 பேர் 9 அடி நீளமுள்ள அலகு குத்தி வந்தனர்.
இவர்கள் 3 நாட்களாக பழநிக்கு பாதயாத்திரையாக வந்தனர். 11 நாட்கள் விரதமிருந்தவர்கள் பழநி இடும்பன் கோயிலில் அலகு குத்தினர். பின் மலைக்கோயிலை கிரிவலம் வந்து மலையேறி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE