பொது செய்தி

தமிழ்நாடு

குப்பையை பிரித்து வழங்குங்க மக்களே

Added : ஜன 02, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் வீடுகள், வணிக நிறுவனங்களில் வீணாகும் கழிவுகளை மக்கும், மக்காத குப்பை என பிரித்து வழங்க மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வீடுகள், வணிக நிறுவனங்களில் வீணாகும் கழிவுகளை மக்கும், மக்காத குப்பை என பிரித்து பெற திட்டமிட்டனர்.தற்போது மாநகராட்சியின் 48 வார்டுகளிலும் உள்ள வீடுகள்,

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் வீடுகள், வணிக நிறுவனங்களில் வீணாகும் கழிவுகளை மக்கும், மக்காத குப்பை என பிரித்து வழங்க மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வீடுகள், வணிக நிறுவனங்களில் வீணாகும் கழிவுகளை மக்கும், மக்காத குப்பை என பிரித்து பெற திட்டமிட்டனர்.தற்போது மாநகராட்சியின் 48 வார்டுகளிலும் உள்ள வீடுகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்களில் தினமும் 100 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது.இதில் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மக்காத குப்பை மறு சுழற்சி செய்ய அனுப்பப்படுகிறது.

இருப்பினும் இத்திட்டத்தை 40 சதவீதம் பேர் மட்டுமே பின்பற்றுவதால் துாய்மை பணியாளர்கள் மூலம் குப்பைகளை பிரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக, ஓட்டல்கள், வணிக நிறுவனங்களில் குப்பையை பிரித்து வழங்குவதில்லை.இதனால் நகர் பகுதியில் துாய்மை பணி, மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கும் பணியில் தொய்வு ஏற்படுகிறது. சிலர் மருத்துவ கழிவுகளையும் சேர்த்து கொட்டுவதால் தொற்று காலத்தில் துாய்மை பணியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை தவிர்க்க பொதுமக்கள் குப்பையை பிரித்து வழங்க வேண்டும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X