மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்பழநி: பஸ்ஸ்டாண்ட் அருகில் குளத்து ரோடு ரவுண்டானா அருகே எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் நேற்று முன்தினம் நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். மத்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் இப்போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கைசர் அலி தலைமையில் பலர் கலந்து கொண்டனர்.
உலகநல வேள்வி திண்டுக்கல்: வேதாத்திரி நகர் அறிவுத்திருக்கோயிலில் புத்தாண்டையொட்டி உலக நலவேள்வி நடந்தது. நிர்வாக அறங்காவலர் எம்.கே.தாமோதரன் வேள்வியை நடத்தினார். மண்டல செயலாளர் பாலசந்தர், துணைத் தலைவர் அர்த்தநாரி, அறிவுத் திருக்கோயில் செயலாளர் பழனிசாமி, பொருளாளர் மோகனவேலு, பேராசிரியர் நளினி, அற்காவலர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் கன்னிவாடி: காரமடை, குட்டத்துப்பட்டி, ஆவரம்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, கரிசல்பட்டி, ஏ.வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, என்.பஞ்சம்பட்டி, ஆத்துார் பகுதிகளில் புத்தாண்டை முன்னிட்டு சர்ச்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. இரவு முழுவதும் சிறப்பு திருப்பலிகள், கூட்டுப்பிரார்த்தனைகள் நடந்தது. சர்ச் மட்டுமின்றி வீடுகளையும் வண்ணவிளக்குகள், மலர்களால் அலங்கரித்து கொண்டாடினர்.
ஆட்டோக்கள் மோதலில் காயம் வடமதுரை: அய்யலுாரில் இருந்து திண்டுக்கல்லிற்கு பூசாரிபட்டி சங்கர் 25, என்பவர் ஆட்டோவை ஓட்டிச் சென்றார். தாமரைப்பாடியில் ரோடு பிரிவை கடந்து குறுக்கே முத்தனாங்கோட்டை முனியாண்டி 60, என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ மீது மோதியது. விபத்தில் இரு ஆட்டோக்களின் டிரைவர்கள், முனியாண்டி ஆட்டோவில் பயணித்த புதுகளராம்பட்டி இரும்பாயி 45, மருதமுத்து 40, பரணிப்பரியா 20, பாப்பாத்தி 36, மணிமேகலை 39 என ஏழு பேர் காயமடைந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
மயங்கி விழுந்தவர் பலி கொடைக்கானல்: வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச் சாவடியில் பணியில் இருந்தவர் வத்தலக்குண்டு ரவிச்சந்திரன் 58.முன்னாள் ராணுவ வீரர். சோதனைச்சாவடியில் நேற்று மயங்கி விழுந்தார். கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்ததில் இறந்தது தெரியவந்தது.'
கொடை'யில் குவிந்த பயணிகள் கொடைக்கானல்: கிறிஸ்துமஸ் நாள் முதல் கொடைக்கானலில் பயணிகள் குவிந்து வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் பயணிகள், விடுதிகளில் முடங்கினர். பிரையன்ட் பூங்கா, வனச்சுற்றுலா தலங்கள், கோக்கர்ஸ்வாக், படகு சவாரி, குதிரை, சைக்கிள் சவாரி செய்து பயணிகள் மகிழ்ந்தனர். காலை முதல் ஏராளமான வாகனங்கள் நகரில் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலையில் ஏரிச்சாலை ஸ்தம்பித்தது.
அறிமுக கூட்டம்திண்டுக்கல்: ஹிந்து முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை விழா நடந்தது. நிறுவன தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் செந்தில், திருப்பூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE