வடமதுரை : செங்குறிச்சி மாமரத்துப்பட்டி நடராஜன் 33. கருத்து வேறுபாடால் பிரிந்து சென்ற மனைவி அழகம்மாளுடன் சேர்ந்து வாழ விரும்பினார்.
இதற்காக கிராம பெரியவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், 'கணவருடன் வாழ விருப்பமில்லை' என மனைவி அழகம்மாள் தெரிவித்தார்.இதுகுறித்து வடமதுரை மகளிர் போலீசில் நடராஜன் புகார் செய்தார். ஆத்திரமடைந்த அழகம்மாள், உறவினர்கள் வெள்ளையப்பன், பிடாரி, தங்கராஜ் ஆகியோர் நடராஜனை தாக்கினர். அவருக்கு அரிவாள் வெட்டும் விழுந்தது. வடமதுரை போலீசார் தாக்கிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE