மதுரை : மதுரை ஜே.கே. பென்னர் நிறுவனம் சார்பில் சுகாதார, காவல் துறையினர் மற்றும் முடக்குச்சாலை, இந்திராணி நகர், கணேசபுரம் மக்களுக்கு கொரோனா மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது.நிறுவன உதவி துணை தலைவர் தினேஷ் டேவிட்சன், மாநகராட்சி சுகாதார வட்டார அலுவலர் சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் கோபால் முககவசம், கிருமிநாசினி, கபசுர குடிநீர் அடங்கிய பெட்டகத்தை வழங்கினர். நிறுவன மேலாண்மை அலுவலர்கள் தாமோதரன், நாகராஜன், ஆனந்த மன்னார், இக்னோஷியஸ், சித்ரா தேவி, வீராசாமி, சக்தி பாலசந்தர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE