பொது செய்தி

தமிழ்நாடு

இடிந்த தீர்த்தக்குள சுவர்

Added : ஜன 02, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலின் சீதா தீர்த்தக் குளம் சுற்றுச்சுவர் சேதமடைந்து கிடப்ப தால், தீர்த்தத்தில் கழிவு நீர் கலந்து சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது. ராமேஸ்வரம் ராம நாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களை தவிர கோயிலுக்கு வெளியில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பனில் 31 தீர்த்தங்கள் உள்ளது. பக்தர்கள் இத்தீர்த்தங்களை நீராடிய பிறகே கோயிலுக்குள் நீராடி

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலின் சீதா தீர்த்தக் குளம் சுற்றுச்சுவர் சேதமடைந்து கிடப்ப தால், தீர்த்தத்தில் கழிவு நீர் கலந்து சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது.

ராமேஸ்வரம் ராம நாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களை தவிர கோயிலுக்கு வெளியில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பனில் 31 தீர்த்தங்கள் உள்ளது. பக்தர்கள் இத்தீர்த்தங்களை நீராடிய பிறகே கோயிலுக்குள் நீராடி விட்டு தரிசனம் செய்வார்கள். ராமேஸ்வரம் கோயிலில் இருந்து 500 மீட்டர் துாரத்தில் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள சீதா தீர்த்த குளத்தில், 2005ம் ஆண்டு வரை பக்தர்கள் புனித நீராடினர்.

இதன்பின் பராமரிப் பதில் சிக்கல் ஏற்பட்டு தீர்த்த குளத்தை சுற்றி திருக்கோயில் நிர்வாகம் சுவர் எழுப்பியதால், பக்தர்கள் நீராட முடிய வில்லை.சில மாதத்திற்கு முன் இத்தீர்த்த குளத்தின் சுற்று சுவர் இடிந்து விழுந்தது, இதனை புதுப்பிக்காததால் மழை காலத்தில் சாலையில் ஓடிய கழிவு நீர் தீர்த்தத்தில் கலந்து, சுகாதார கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குளத்தில் குப்பைகள், பாலிதீன் பைகள் குவிந்து கிடப்பதால் தீர்த்தம் புனிதம் சீரழிந்துள்ளது. எனவே இடிந்த சுற்று சுவரை அகற்றி புதிய சுவர் எழுப்பி, சீதா தீர்த் தத்தை பராமரிக்க கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும்.---

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X