பொது செய்தி

தமிழ்நாடு

களையிழந்த புத்தாண்டு கொண்டாட்டம்

Added : ஜன 02, 2021
Share
Advertisement
ஈரோடு: கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு தொடர்வதால், ஈரோட்டில் வழக்கமான புத்தாண்டு கொண்டாட்டம், நேற்று களையிழந்தது. கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, நடப்பாண்டு ஓட்டல், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில், ஆங்கில புத்தாண்டு கொண்டாட, தடை விதிக்கப்பட்டது. இதனால், ஈரோடு மாநகர், சுற்று பகுதி, கார்டன் ஓட்டல் தாபாக்கள், நீச்சல் குளத்துடன் உள்ள அரங்குகளில், கேளிக்கை

ஈரோடு: கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு தொடர்வதால், ஈரோட்டில் வழக்கமான புத்தாண்டு கொண்டாட்டம், நேற்று களையிழந்தது. கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, நடப்பாண்டு ஓட்டல், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில், ஆங்கில புத்தாண்டு கொண்டாட, தடை விதிக்கப்பட்டது. இதனால், ஈரோடு மாநகர், சுற்று பகுதி, கார்டன் ஓட்டல் தாபாக்கள், நீச்சல் குளத்துடன் உள்ள அரங்குகளில், கேளிக்கை நிகழ்ச்சி, புத்தாண்டு விருந்து நடக்கவில்லை. பி.எஸ்., பார்க் சி.எஸ்.ஐ, சர்ச்சில், 12:00 மணிக்கு புத்தாண்டு பிறப்பு அறிவிப்பு, மின் விளக்கு மாற்றம், போலீஸ் தடையால் நடக்கவில்லை. மேலும், சர்ச்சுக்கு செய்யப்பட்ட அலங்கார விளக்குகளும் அணைக்கப்பட்டன. இரவு, 10:00 மணிக்கு மேல், பொது இடங்களில் மக்கள் கூட அனுமதி மறுக்கப்பட்டது. பேக்கரி, டீக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும், போலீஸ் உத்தரவால் மூடப்பட்டன. இதனால் மாநகரம் வெறிச்சோடியது. சாலை, பொது இடம் என திரும்பிய பக்கமெல்லாம், போலீசார் தலைகளே தென்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X