ஈரோடு: ''ஆயுர்வேத அறுவை சிகிச்சைக்கு எதிராக, இந்திய மருத்துவ சங்கம் சார்பில் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது,'' என்று, ஐ.எம்.ஏ., தேசிய துணை தலைவர் ராஜா தெரிவித்தார்.
ஐ.எம்.ஏ., தேசிய செயற்குழு கூட்டம், சென்னையில் நடந்தது. இக்கூட்ட முடிவு குறித்து, தேசிய துணை தலைவர் ராஜா கூறியதாவது: இந்திய மருத்துவத்துக்கான மத்திய குழு, ஆயுர்வேத பாடத்தில், அறுவை சிகிச்சையை இணைத்து கற்பிக்க ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கு ஆங்கில மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராடி வருகிறோம். இந்நிலையில் செயற்குழு முடிவுப்படி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு மாநில அரசிடமும் நேரடியாக இப்பிரச்னை குறித்து பேசி, ஆயுர்வேத பாடத்திட்டத்தில், அலோபதி அறுவை சிகிச்சை முறையை புகுத்தக்கூடாது என கேட்கவுள்ளோம். மேலும் பிரதமரை சந்திக்கவும், முடிவு செய்துள்ளோம். இதன் ஆபத்தை மக்களிடம் விளக்கி, மனித சங்கிலி உட்பட பல்வேறு போராட்டங்களையும் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE