பொது செய்தி

தமிழ்நாடு

வரும் 6, 7 ல் முதல்வர் வருகை: அரசு நிகழ்ச்சியுடன் பிரசாரம்

Added : ஜன 02, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், அரசு மற்றும் அ.தி.மு.க., பிரசார நிகழ்ச்சிகளில் பங்கேற்க, 6, 7 தேதிகளில் முதல்வர் பழனிசாமி வருகிறார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன் கலந்து கொண்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: வரும், 6ல் ஈரோடு வரும் முதல்வர் பழனிசாமி, திண்டலில் மஞ்சள் ஏலக்கூடம் கட்ட, 1.38 கோடி

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், அரசு மற்றும் அ.தி.மு.க., பிரசார நிகழ்ச்சிகளில் பங்கேற்க, 6, 7 தேதிகளில் முதல்வர் பழனிசாமி வருகிறார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன் கலந்து கொண்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: வரும், 6ல் ஈரோடு வரும் முதல்வர் பழனிசாமி, திண்டலில் மஞ்சள் ஏலக்கூடம் கட்ட, 1.38 கோடி ரூபாயில் அடிக்கல் நாட்டுகிறார். பின், மக்கள், அ.தி.மு.க.,வினர், இளைஞர், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள், ஐ.டி., பிரிவினருடன் கலந்துரையாடுகிறார். பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவதுடன், தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். வரும், 7ல் ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி மற்றும் பெருந்துறை பகுதியில், தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அத்துடன், 540 கோடி ரூபாய் மதிப்பிலான ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணி, 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான வ.உ.சி., பூங்கா பணிகளை திறந்து வைக்கிறார். வேறு சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். ஆலோசனை கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், தென்னரசு, சிவசுப்பிரமணி, ராஜா கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X