பொது செய்தி

தமிழ்நாடு

கலப்பட மருத்துவம் மிகப்பெரிய ஆபத்து: இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை

Added : ஜன 02, 2021
Share
Advertisement
சேலம்: கலப்பட மருத்துவம், மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என, மத்திய அரசுக்கு, இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.இந்திய மருத்துவ சங்க, சேலம் கிளை, 2021க்கான நிர்வாகிகள் பதவியேற்பு விழா, அதன் சங்க கட்டடத்தில், நேற்று நடந்தது. தலைவராக பாலமுருகன், செயலர் ராஜேஷ்செங்கோடன் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவியேற்றனர். இதில், சங்க, தேசிய தலைவர் ஜெயலால் பேசியதாவது: நாடு முழுதும்,

சேலம்: கலப்பட மருத்துவம், மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என, மத்திய அரசுக்கு, இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.


இந்திய மருத்துவ சங்க, சேலம் கிளை, 2021க்கான நிர்வாகிகள் பதவியேற்பு விழா, அதன் சங்க கட்டடத்தில், நேற்று நடந்தது. தலைவராக பாலமுருகன், செயலர் ராஜேஷ்செங்கோடன் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவியேற்றனர். இதில், சங்க, தேசிய தலைவர் ஜெயலால் பேசியதாவது: நாடு முழுதும், அலோபதி மருத்துவர், 11 லட்சம் பேர் உள்ளனர். ஆயுஷ் மருத்துவர்களின் எண்ணிக்கை ஏழு லட்சம் பேர். உலக சுகாதார நிறுவனத்திடம், 18 லட்சம் மருத்துவர் இருப்பதாக, ஒட்டுமொத்தமாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது ஏற்புடையதல்ல. அலோபதி; ஆயுஷ் சிகிச்சை முறை வெவ்வேறானவை. இருதய நோய் மருத்துவரால், ஒட்டுக்குடல் அறுவை சிகிச்சை செய்ய முடியாது. அலோபதி படித்த மருத்துவருக்கே, அந்நிலை என்றால், ஆயுஷ் மருத்துவரை, அறுவை சிகிச்சைக்கு எப்படி அனுமதி முடியும். ஆயுஷ் டாக்டர், ஆறு மாத பயிற்சி பெற்று, அறுவை சிகிச்சை செய்வதை ஏற்க முடியாது. இதற்கு, மத்திய அரசின் தவறான வழிகாட்டுதலே காரணம். கலப்பட மருத்துவம், மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில், தமிழக அரசு தெளிவாக உள்ளது. இதர மாநில அரசுகள், குழப்பத்தில் உள்ளன. அதை தெளிவுபடுத்தி, அனைவரையும் ஒருங்கிணைத்து, போராட்டத்தை முன்னெடுத்து சென்று, வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X