கெங்கவல்லி: பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில், இந்திய அளவில் சிறந்த பேரூராட்சியாக, தெடாவூர் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில், புது தொழில்நுட்பத்துடன், குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்படும், 'லைட்ஹவுஸ்' குடியிருப்பு திட்ட பணிக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. அதில், மத்திய வீட்டுவசதி, நகர்புற விவகார துறை இணை அமைச்சர் ஹர்தீப்சிங்புரி, பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில், பயனாளிகள் சுயமாக வீடு கட்டிக்கொள்ளும் திட்டத்தில், இந்திய அளவில், சிறந்த பேரூராட்சியாக தெடாவூர், மாநகராட்சிகளில் மூன்றாம் இடமாக சேலத்தை அறிவித்து, விருது வழங்கினார். சேலம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, 'வீடியோ கான்பரன்ஸ்' நிகழ்ச்சியில், கலெக்டர் ராமன், பேரூராட்சி உதவி இயக்குனர் கணேஷ்மூர்த்தி (பொ), தெடாவூர் பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகசுந்தரி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
விருதுக்கு காரணம் என்ன? கடந்த, 2015 - 16ல், பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில், தெடாவூர் பேரூராட்சியில், 117 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 300 சதுரடியில் வீடு கட்டிக்கொள்ள, மத்திய, மாநில அரசு மானியம், தலா, 2.10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இத்திட்டத்தில், அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டதால், இந்திய அளவில் சிறந்த பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE