ஓமலூர்: முயல் வேட்டைக்கு முயன்ற, தந்தை, மகனுக்கு, வனத்துறையினர் அபராதம் விதித்தனர். டேனிஷ்பேட்டை வனச்சரகம், தின்னப்பட்டி பிரிவு, கோட்டமேட்டில், ரேஞ்சர் பரசுராம்மூர்த்தி தலைமையில் வனத்துறையினர், நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது, காட்டு முயல்களை வேட்டையாட, கையில் சுருக்கு கம்பிகளோடு கண்ணி வைத்துக்கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அதில், காடையாம்பட்டி, தொட்டி நாயக்கனூரை சேர்ந்த, பெருமாள், 58, அவரது மகன் குப்புசாமி, 38, என, தெரிந்தது. அவர்களுக்கு, தலா, 5,000 ரூபாய் வீதம், அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE