காரிப்பட்டி: சேலம், அயோத்தியாப்பட்டணம் அருகே, சுக்கம்பட்டியை சேர்ந்த, மணி மகன் வரதராஜன், 30. இவர், சேலம் மாநகர போலீசில், மோப்ப நாய் பிரிவில் போலீசாக பணிபுரிந்தார். நேற்று, பணி முடிந்து, '?ஹாண்டா - சைன்' பைக்கில், அயோத்தியாப்பட்டணம் வழியாக சென்று கொண்டிருந்தார். இரவு, 9:15 மணிக்கு, வலசையூர் அருகே, பனங்காட்டில் சென்றபோது, அரூரில் இருந்து, சேலம் நோக்கி வந்த லாரி, அவர் பைக் மீது மோதியது. அதில், வரதராஜன், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். காரிப்பட்டி போலீசார், வழக்கு பதிந்து லாரியை விட்டு, தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE