சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதல் திருமணத்தால் மோதல்: இருதரப்பில் 6 பேர் கைது; 50 பேருக்கு வலை

Added : ஜன 02, 2021
Share
Advertisement
ஆத்தூர்: காதல் திருமணத்தால் ஏற்பட்ட மோதலில், இருதரப்பை சேர்ந்த ஆறு பேரை கைது செய்த போலீசார், 50 பேரை தேடுகின்றனர்.ஆத்தூர், அம்மம்பாளையத்தை சேர்ந்த, சுப்ரமணி மகன் சத்யநாராயணன், 20. அதே ஊரைச் சேர்ந்த, சீனிவாசன் மகள் ரம்யா, 19. இவர்கள், பெற்றோர் எதிர்ப்பை மீறி, கடந்த டிச., 20ல், சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். நேற்று முன்தினம், சென்னையில் இருந்து வந்த, சத்யநாராயணன் பெற்றோர்

ஆத்தூர்: காதல் திருமணத்தால் ஏற்பட்ட மோதலில், இருதரப்பை சேர்ந்த ஆறு பேரை கைது செய்த போலீசார், 50 பேரை தேடுகின்றனர்.


ஆத்தூர், அம்மம்பாளையத்தை சேர்ந்த, சுப்ரமணி மகன் சத்யநாராயணன், 20. அதே ஊரைச் சேர்ந்த, சீனிவாசன் மகள் ரம்யா, 19. இவர்கள், பெற்றோர் எதிர்ப்பை மீறி, கடந்த டிச., 20ல், சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். நேற்று முன்தினம், சென்னையில் இருந்து வந்த, சத்யநாராயணன் பெற்றோர் சுப்ரமணி, 45, விஜயலட்சுமி, 41, ஆகியோரை, ரம்யாவின் உறவினர்கள், அரிவாளால் வெட்டி, வீட்டை சேதப்படுத்தினர். அதேபோல், சுப்ரமணியின் உறவினர்கள், சீனிவாசன் வீட்டுக்கு சென்று, பொருட்களை சேதப்படுத்தினர். சீனிவாசன் மனைவி வெண்ணிலா புகார்படி, கொலை மிரட்டல், பொருட்கள் சேதப்படுத்துதல் பிரிவில், 50 பேர் மீது வழக்கு பதிந்தனர். இதில், சுப்ரமணி உறவினர்கள் அருண்குமார், 29, மணிமாறன், 25, சஞ்சய், 23, ஆகியோரை, ஆத்தூர் ஊரக போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்றவர்களை தேடுகின்றனர். அதேபோல், சுப்ரமணி புகாரில், வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல், பொருட்கள் சேதப்படுத்துதல் பிரிவுகளில், ஆறு பேர் மீது வழக்கு பதிந்தனர். இதில், சீனிவாசன் உறவினர்கள் பாலாஜி, 30, மணிகண்டன், 30, மணி, 30, ஆகியோரை கைது செய்த போலீசார், மற்றவர்களை தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X