தர்மபுரி: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில், நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.
தர்மபுரி எஸ்.வி., ரோடு சாலைவிநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட, 16 வகையான வாசனை திரவியங்களால் அபி?ஷகம் செய்யப்பட்டது. பின்னர், மூலவருக்கு முத்தங்கி கவசம் சாத்தப்பட்டது. இதேபோல், துரைசாமிநாயுடுதெரு முத்துகாமாட்சி அம்மன் கோவில், தேர்நிலையம் செல்வகணபதி கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண கோவில், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில் உட்பட, பல்வேறு பகுதியில் உள்ள கோவில்களில், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, அபி?ஷகம், அலங்காரங்கள் நடந்தன.
* அரூர், பழையபேட்டை கரியபெருமாள் கோவிலில், மக்கள் நீண்ட வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர். அரூர், வாணீஸ்வரர் கோவில், மேட்டுத்தெருவில் உள்ள பெருமாள்கோவில், தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவில், கடத்தூர் அடுத்த மணியம்பாடி வெங்கட்ரமண பெருமாள் கோவில், மொரப்பூர் சென்னகேசவ மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்களில், ஏராளமான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* ஓசூர், மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலில், ஏராளமான பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து, சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல், ஓசூர் கோட்டை மாரியம்மன், சூளகிரி வரதராஜ பெருமாள், கோபசந்திரம் தட்சிண திருப்பதி, ஓசூர் மலை மீதுள்ள பெருமாள் கோவில், ஓசூர் பண்டாஞ்சநேயர், ஏரித்தெரு ஆஞ்சநேயர், ராமர் கோவில், கோகுல் நகர் சாய்பாபா கோவில், பாகலூர் சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
* கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபி?ஷகம், சிறப்பு பூஜை நடந்தது. அம்மன் தாமரை மலரில் அமர்ந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதே போல், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன், முத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. புதுப்பேட்டை, சித்தி விநாயகர் கோவிலில் நேற்று காலை, விநாயகருக்கு, 666 லிட்டர் பால் அபி?ஷகம் செய்யப்பட்டு, தங்க கவச அலங்காரம் நடந்தது. பெரிய ஏரி மேற்கு கோடிக்கரையில் உள்ள கால பைரவருக்கு அபி?ஷகம் செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE