பொது செய்தி

தமிழ்நாடு

மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

Added : ஜன 02, 2021
Share
Advertisement
பாலக்கோடு: தி.மு.க., உள்ளிட்ட மாற்று கட்சிகளை சேர்ந்த, 500 பேர் அமைச்சர் அன்பழகன் முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு, பாலக்கோடு வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தில் தலைமை வகித்தார். இதில் அமைச்சர் அன்பழகன் பேசியதாவது: தமிழகத்தில் சொல்வதையும், சொல்லாததையும் செய்த ஒரே கட்சி, அ.தி.மு.க.,தான். தங்கள் குடும்ப நலத்துக்காக, குடும்ப அரசியல் செய்யும் ஸ்டாலின்,

பாலக்கோடு: தி.மு.க., உள்ளிட்ட மாற்று கட்சிகளை சேர்ந்த, 500 பேர் அமைச்சர் அன்பழகன் முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு, பாலக்கோடு வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தில் தலைமை வகித்தார். இதில் அமைச்சர் அன்பழகன் பேசியதாவது: தமிழகத்தில் சொல்வதையும், சொல்லாததையும் செய்த ஒரே கட்சி, அ.தி.மு.க.,தான். தங்கள் குடும்ப நலத்துக்காக, குடும்ப அரசியல் செய்யும் ஸ்டாலின், அ.தி.மு.க.,வில் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த பழனிசாமி முதல்வரானதையும், அவர் செய்த சாதனைகளையும் பொறுத்து கொள்ள முடியவில்லை. எம்.ஜி.ஆர்., உருவாக்கிய, அ.தி.மு.க., தொடர்ந்து, 10 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி புரிந்தது. ஜெயலலிதா மீண்டும் அந்த சாதனையை படைத்தார். அ.தி.மு.க., அரசின் சாதனைகளால் தமிழக மக்கள் தொடர்ந்து, மூன்றாவது முறையாக, அ.தி.மு.க.,வை வெற்றி பெற செய்யவுள்ளனர். எனவே புதிதாக இணைந்தவர்கள் மட்டுமின்றி, அ.தி.மு.க.,வினரும், தமிழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். பாலக்கோடு தொகுதியில், அ.தி.மு.க.,வில் யாருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தாலும், அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X