மர்மமான முறையில் இறந்த தொழிலாளி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மர்மமான முறையில் இறந்த தொழிலாளி

Added : ஜன 02, 2021
Share
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, மர்மமான முறையில் கூலித்தொழிலாளி உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த எலசட்டியை சேர்ந்தவர் சின்னபிட்டப்பா, 50. அதே பகுதியை சேர்ந்தவர் திவாகர், 25. உறவினர்களான இருவரும், கூலித்தொழிலாளர்கள். கடந்த, 30 இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். படுகாயமடைந்த சின்னபிட்டப்பா, தேன்கனிக்கோட்டை அரசு

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, மர்மமான முறையில் கூலித்தொழிலாளி உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த எலசட்டியை சேர்ந்தவர் சின்னபிட்டப்பா, 50. அதே பகுதியை சேர்ந்தவர் திவாகர், 25. உறவினர்களான இருவரும், கூலித்தொழிலாளர்கள். கடந்த, 30 இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். படுகாயமடைந்த சின்னபிட்டப்பா, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக, பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக, தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில், திவாகரை, அவரது உறவினர்கள் காயமடைந்ததாக கூறி, சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திவாகர், நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்துள்ள, தேன்கனிக்கோட்டை போலீசார், சின்னபிட்டப்பா தாக்கியதில் திவாகர் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X