கிருஷ்ணகிரி: ரஜினி மக்கள் மன்ற பணிகள், வழக்கத்தை விட வேகமாக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என, கிருஷ்ணகிரி மாவட்ட, ரஜினி மக்கள் மன்ற செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ரஜினியின் அறிவிப்பு பலருக்கு ஏமாற்றம், அதிர்ச்சியை அளித்தாலும், என்றும் அவரின் முடிவிற்கு கட்டுப்பட்டவர்களாக இருப்போம். உடல் நலத்தை பற்றி, அவர் துளியும் கவலைப்படவில்லை. மாறாக நம்மை நினைத்து, நம் எதிர்காலம் மற்றும் பொருளாதார ரீதியாக, துன்பங்களை சந்திக்கக் கூடாது என்பதற்காக இந்த முடிவை அறிவித்துள்ளார். நமக்காக வாழும் தலைவர் என்பதை, நாமும் உணர்ந்து இருக்கிறோம். எதிர்பார்ப்புகள் இருந்தால் தானே ஏமாற்றத்தை சந்திப்பதற்கு. அரசியல் கட்சிகள் கூட, செய்யாத பல மக்கள் பணிகளை, கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் செய்து வருகிறது. இந்த பணிகள், தொடர்ந்து வழக்கத்தை விட வேகமாக செயல்படுத்துவோம். இதுவரை ஒத்துழைப்பு கொடுத்து வந்த, அனைத்து நிர்வாகிகள், பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE