ஓசூர்: ஓசூர், ராஜகணபதி நகரில் வரசித்தி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. நேற்று ஆங்கில புத்தாண்டு தினத்தில், உலக மக்கள் நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், நாடு நலம் பெறவும், 63ம் ஆண்டு கடலைக்காய் திருவிழா நேற்று காலை, 4:30 மணிக்கு கணபதி ?ஹாமத்துடன் துவங்கியது. பின்னர் சுவாமிக்கு அபி?ஷகம், புஷ்ப அலங்காரம், மங்களாரத்தி மற்றும் கடலைக்காய்க்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் ஒன்று சேர்ந்து, கடலைக்காய்களை கோவில் கோபுரம் மற்றும் சுவாமி சிலை மீது, தூக்கி வீசி ஆஞ்சநேயரை வழிபட்டனர். கோபுரத்தின் மீது வீசப்பட்ட கடலைக்காய்களில், கீழே விழுந்தவற்றை மட்டும், பக்தர்கள் பிரசாதமாக வீடுகளுக்கு எடுத்து சென்றனர். ஏற்பாடுகளை, முன்னாள் நகராட்சி தலைவர் மாதேஸ்வரன், சொக்கலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, ரவிசங்கர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE