பொது செய்தி

தமிழ்நாடு

புத்தாண்டு வசூல் வேட்டை; சிக்கிய சுகாதார அதிகாரி

Added : ஜன 02, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்: புத்தாண்டை முன்னிட்டு, தஞ்சை சுகாதார துணை இயக்குனர் கட்டாயமாக வசூல் செய்த, 1.24 லட்சம் ரூபாய், 4 கிராம் தங்கம் மற்றும் பரிசுப் பொருட்களை, லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.தஞ்சை காந்திஜி சாலையில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் உள்ளது. நேற்று முன்தினம், வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு டாக்டர்கள் ஏராளமானோர், துணை இயக்குனர்

தஞ்சாவூர்: புத்தாண்டை முன்னிட்டு, தஞ்சை சுகாதார துணை இயக்குனர் கட்டாயமாக வசூல் செய்த, 1.24 லட்சம் ரூபாய், 4 கிராம் தங்கம் மற்றும் பரிசுப் பொருட்களை, லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.


தஞ்சை காந்திஜி சாலையில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் உள்ளது. நேற்று முன்தினம், வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு டாக்டர்கள் ஏராளமானோர், துணை இயக்குனர் ரவீந்திரனை சந்தித்து, புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியதாக, மாவட்ட ஆய்வுக்குழுவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் கஜேந்திரன், தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு துணை இயக்குனர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, துணை இயக்குனர் ரவீந்திரன் மேஜையில் இருந்து, 1.17 லட்சம், நிர்வாக அலுவலர் வெங்கடசுப்பிரமணியன் மேஜையில் இருந்து, 7,500 ரூபாய் என மொத்தம், 1 லட்சத்து, 24 ஆயிரத்து, 500 ரூபாய், 4 கிராம் தங்கக்காசு, வெள்ளி விளக்கு, 42 சால்வைகள், 15 கிலோ பழங்கள், இனிப்புகள் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும், கும்பகோணம் தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் நேற்று காலை ஒப்படைக்கப்பட்டன. இது தொடர்பாக, துணை இயக்குனர் ரவீந்திரன், நிர்வாக அலுவலர் வெங்கட சுப்பிரமணியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X