ப்ரீ பையர் கேம் விளையாட கூரை ஏறிச்சென்ற வாலிபர் சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ப்ரீ பையர் கேம்' விளையாட கூரை ஏறிச்சென்ற வாலிபர் சாவு

Added : ஜன 02, 2021
Share
மொடக்குறிச்சி: எழுமாத்தூரில், 'ப்ரீ பையர் கேம்' விளையாடிவிட்டு, கூரையில் நடந்து வீடு திரும்பிய வாலிபர் விபத்தில் சிக்கி இறந்தது, சோகத்தை ஏற்படுத்தியது.ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் பிகாஸ்திகா, 19; ஈரோடு மாவட்டம் எழுமாத்தூரில் உள்ள, ஒரு ஸ்பின்னிங் மில்லில் உறவினர்களுடன் தங்கி, வேலை பார்த்தார். கடந்த, 29ம் தேதி மாலை, வேலை முடிந்து வீடு திரும்பினார். உறவினர் ராஜேஸ்ஓரமுடன்

மொடக்குறிச்சி: எழுமாத்தூரில், 'ப்ரீ பையர் கேம்' விளையாடிவிட்டு, கூரையில் நடந்து வீடு திரும்பிய வாலிபர் விபத்தில் சிக்கி இறந்தது, சோகத்தை ஏற்படுத்தியது.


ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் பிகாஸ்திகா, 19; ஈரோடு மாவட்டம் எழுமாத்தூரில் உள்ள, ஒரு ஸ்பின்னிங் மில்லில் உறவினர்களுடன் தங்கி, வேலை பார்த்தார். கடந்த, 29ம் தேதி மாலை, வேலை முடிந்து வீடு திரும்பினார். உறவினர் ராஜேஸ்ஓரமுடன் சேர்ந்து, மொபைலில் ப்ரீ பையர் கேம் விளையாடினார். வீட்டுக்குள் சிக்னல் கிடைக்காததால், மில் அருகே கொய்யா மரத்தில் ஏறி, அருகிலுள்ள ஆஸ்பெட்டாஸ் கூரையில் நடந்து சென்று, உயரமான கட்டடத்தில் அமர்ந்து விளையாடினர். இரவு, ?:?? மணியளவில் மீண்டும் வீடு திரும்ப, ஆஸ்பெட்டாஸ் கூரை மீது நடந்தனர். அப்போது கூரை வலுவிழந்து உடைந்ததில், பிகாஸ்திகாவுக்கு தலை, கை, வயிறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. ராஜேஸ் ஓரம் காயமின்றி தப்பினார். பிகாஸ்திகாவை மீட்ட உறவினர்கள், ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து அரச்சலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X