சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தலையை துண்டித்து வெளியே எடுக்கப்பட்ட குழந்தை உடல்; டாக்டர்களின் அலட்சியத்தால் விபரீதம் என குற்றச்சாட்டு

Added : ஜன 02, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் அரசு மருத்துவமனையில், டாக்டர்களின் அலட்சியத்தால், பெண்ணின் வயிற்றில் இருந்த ஆண் குழந்தை இறந்து விட்டதாக, உறவினர்கள் குற்றம்சாட்டினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த ஒசபுரத்தை சேர்ந்தவர் சந்திரப்பா, 35; விவசாயி. இவர் மனைவி பாக்கியலட்சுமி, 26. இவர்களுக்கு பாலாஜி, 7, என்ற மகன் உள்ளார். இந்நிலையில், பாக்கியலட்சுமி, ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு கடந்த

ஓசூர்: ஓசூர் அரசு மருத்துவமனையில், டாக்டர்களின் அலட்சியத்தால், பெண்ணின் வயிற்றில் இருந்த ஆண் குழந்தை இறந்து விட்டதாக, உறவினர்கள் குற்றம்சாட்டினர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த ஒசபுரத்தை சேர்ந்தவர் சந்திரப்பா, 35; விவசாயி. இவர் மனைவி பாக்கியலட்சுமி, 26. இவர்களுக்கு பாலாஜி, 7, என்ற மகன் உள்ளார். இந்நிலையில், பாக்கியலட்சுமி, ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு கடந்த மாத இறுதியில், ரத்தப்போக்கு ஏற்பட்டதால், கக்கதாசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு குணமாகாத நிலையில், அங்கிருந்த டாக்டர்கள் அறிவுரைப்படி, மூன்று நாட்கள் கழித்து, ஓசூர் அரசு மருத்துவமனையில் பாக்கியலட்சுமி அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை செய்து குழந்தையை காப்பாற்ற, பாக்கியலட்சுமி உறவினர்கள், டாக்டர்களிடம் கூறினர். ஆனால், அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை. இந்நிலையில் கடந்த, 30ல் மதியம், ஆண் குழந்தையின் கால், உடல் பகுதி மட்டும் தாயின் வயிற்றில் இருந்து வெளியேற, தலைப்பகுதி மட்டும் சிக்கி கொண்டது. குழந்தை இறந்து விட்டதாக கூறி, உடல் பகுதியை மட்டும் டாக்டர் குழுவினர் வெட்டி எடுத்தனர். அதன் பின் பாக்கியலட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்து, வயிற்றில் இருந்த குழந்தையின் தலையை அகற்றினர். டாக்டர்களின் அலட்சியத்தால், குழந்தை இறந்து விட்டதாக, பாக்கியலட்சுமி உறவினர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X